2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்’

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பெருந்தோட்டத் தொழிற்றுறையை, அரசாங்கம் மீளவும் பொறுப்பேற்றுச் செயற்படுத்த வேண்டுமென்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாகவே, சம்பள உயர்வு வழங்கப்படல் வேண்டுமென்றும் வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மகஜரொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி, குழு 24 என்ற அமைப்பினால், பதுளையில் நேற்று  (11) கறுப்புச் சட்டைப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் முடிவில், ஜனாதிபதிக்குக் கையளிப்பதற்கான மகஜரொன்று, ஊவா மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சரிடம், மேற்படி குழுவினால் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட மகஜரில், தோட்டத் தொழிலாளர்களுக்கு, மாதாந்தம் குறைந்தபட்சம் 25 நாட்களாவது தொழில் வழங்கப்பட வேண்டியது அவசியமென்றும் மலையக இளைஞர் - யுவதிகளுக்கு, விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, பல்கலைக்கழகத் தெரிவிவின் சலுகை அடிப்படையில் வெட்டுப்புள்ளித் திட்டம் அமுல்படுத்தப்படல் வேண்டும் என்றும் ஒரே குடியிறுப்பில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் திருமணம் முடித்த பிள்ளைகளுக்கு, இருபது பேர்ச் காணி வழங்கப்படல் வேண்டுமென்றும், அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, 'பசுமைப் பூமி' வீட்டுத்திட்டமும், உடனடியாக அமுல்படுத்தப்படல் வேண்டும் என்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான விசேட விவசாயக் காப்புறுதித் திட்டத்தையும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமென்றும், குறித்த அமைப்பினால், மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .