2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தக் காணிகளை பகிர எதிர்பார்ப்பு’

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரவீந்திர விராஜ் அபேயசிறி  

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தக் காணிகளை பகிர்ந்தளிக்க எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்த அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, தோட்டத் ​தொழிலாளர்கள் என்ற பெயரை இல்லாமலாக்கும் புரட்சியைச் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.  

மாத்தளை - இரத்தோட்டையில், நேற்று முன்தினம் (23) “பசுமை பூமி” திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்குக் காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,  150 வருடங்கள் பழமையான முறைமைகளிலிருந்து மீண்டு, தொழிலாளர்களுக்கு, தேயிலைத் தோட்டங்களைக் கையளிக்க வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து ​தேயிலை விளைச்சளை விலைக்கு வாங்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதே, தனது எதிர்பார்ப்பு என்றும் கூறினார்.  

தோட்டத் தொழிலாளர்களுக்கு, தற்போதைய அரசாங்கம், பெரும் சேவைகளைச் செய்துள்ளதோடு, 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கானத் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளதெனத் தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்கள், பொருளாதார அபிவிருத்தியின் பங்குதாரர்கள் என்பதால், அவர்களை மறந்துவிட்டுப் பயணித்தால், எதிர்காலம் இருக்காது என்றும் கூறினார்.  

அதேபோல், கடந்த காலங்களில், கிருமி நாசினிகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றுது எனக் கூறி, அவற்றை தடைச் செய்ய சிலர் கோரியிருந்தாகவும் அதை, விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாத காரணத்தால், தேசிய இறப்பர் தோட்டங்களில், அவற்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதி, மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படு உள்ளது என்றும் கூறினார்.  

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 750 ரூபாய் கொடுப்பனவை, 200 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் தனக்கு முழுமையான அதிகாரம் இருந்திருந்தால், அந்தத் தொகையை மேலும் அதிகரித்திருக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X