2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக், டி.கேதீஸ்

பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதுத் தொடர்பிலும் அந்த மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதுத் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டம்,  மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவின் தலைமையில், ஆளுநர் அலுவலகத்தில், நேற்று(2)  நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், மத்திய மாகாண பெருந்தோட்ட  நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு போதிய வழிகாட்டல்களை வழங்குவதுடன், அவர்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில், நிவாரணங்கள் வழங்குவதுத் தொடர்பாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

இந்தக் கலந்துரையாடலில் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஸ்ரீ மால் விஜேசேகர உட்பட பல அதிகாரிகள்  பெருந்தோட்டத்துறை சார்பாகக் கலந்துகொண்டதுடன்,  மத்திய மாகாண பிரதான செயலாளர் திருமதி குமுதினி கருனாரத்தன, ஆளுநர் காரியாலய செயலாளர் உபாலி ரணவக்க, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் டீ.ஆர். எல். ரனவீர உற்பட பலர் கலந்துகொண்டனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .