2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெல்மடுல்ல பகுதியில் போலி ஆவணங்களுடன் காணிகள் அபகரிப்பு

Gavitha   / 2021 மார்ச் 11 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜீ.எம்.குமார்

பெல்மடுல்ல பகுதியில், அரசாங்கம் மற்றும் தோட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமான நூற்றுக்காணக்கான ஏக்கர் காணிகளை, போலி ஆவணப் பத்திரங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பலாத்காரமாகக் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை, அரசாங்கம் உடனடியா பறிமுதல் செய்யவேண்டும் எனத் தெரிவித்து, நேற்று (10). பொல்மடுல்ல, கனேகம பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பெல்மடுல்ல பிரதேச சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் ஜனதா விமுக்தி பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

2016ஆம் ஆண்டு, பெல்மடுல்ல ஒருங்கிணைப்புக் குழுவால், சுகாதார சேவைகள் பகுதிக்காகவும் பெல்மடுல்ல பொலிஸ் நிலையத்துக்காக ஒதுக்கப்பட்ட காணித்துண்டும் இப்போது அரசியல்வாதியின் ஒப்புதலுடன், கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

தோட்ட நிர்வாகங்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று இதன்போது கூறப்பட்டதுடன், மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்க காணிகளை பிரித்து எடுக்க முயன்றபோது, அதற்கு எதிராக தோட்ட நிர்வாகங்கள் வழக்குத் தொடர்ந்ததாகவும் ஆனால், இந்த அபகரிப்புக்கு, தோட்ட நிர்வாகங்கள் அமைதியாகவே இருப்பதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.

எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .