2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’பெல்மோரல் மக்களுக்கு வீடுகள் எங்கே?’

Editorial   / 2019 ஜூலை 05 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

 

அக்கரபத்தனை, பெல்மோரல் தோட்டக் குடியிருப்பு, கடந்த ஆண்டு ஜுன் மாதம் 13ஆம் ஆண்டு, தீ விபத்துக்கு உள்ளான நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் வீடுகள் அமைத்துக்கொடுக்காதது ஏன் என, இலங்கைக் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, அவர், நேற்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும், இடர்முகாமைத்துவ நிலையங்களுக்கும், தோட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்தும், இதுவரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வீடு அமைப்பதற்கான இடஒதுக்கீட்டை, தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு, அந்த இடம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தால் சான்றிதழும் பெறப்பட்டு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பார்வைக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வீடமைப்புக்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், இன்னும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, இது குறித்து, கவனம் செலுத்துமாறு, சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் அதிகாரிகளுக்கும், இ.தொ.கா கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .