2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’பேரம் பேசும் சக்தி கூட்டணிக்கே உள்ளது’

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்ட கையோடு கிடைத்திருக்க வேண்டிய உரிமைகளைக்கூட, தமிழ் முற்போக்குக் கூட்டணி,  நான்கரை வருட நல்லாட்சியிலேயே பெற்றுக்கொடுத்தது என்றுத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார், மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வல்லமையும் பேரம் பேசும் ஆற்றலும், தமது அணிக்கே உள்ளதெனவு தெரிவித்தார்.

“வாக்குரிமையின் மூலம் மக்கள் அதனை மேலும் பலப்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

கண்டி பாத்தத்தும்பர தேர்தல் தொகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

“மலையக மக்களுக்காக, தமிழ் முற்போக்குக் கூட்டணி எதனையுமே செய்யவில்லை. கண்டி மாவட்டத்தில்கூட அபிவிருத்திகள் இடம்பெறவில்லை என்று பருவகால வேட்பாளர்களும் அரசாங்கத்தின் கைக்கூலிகளும் மக்கள் மத்தியில் போலிப்பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

“அதுவும் என்னால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தின் மீது நின்றபடி, எனது முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட தனிவீடுகளைப் பார்த்தப்படியே, எதுவுமே நடக்கவில்லை என வாய்க்கூசாமல் பொய்யுரைக்கின்றனர்.

“கண்டி மாவட்டத்தில், தமிழ்பேசும் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பட்டியலிட்டுக்காட்டி நான் உரிமையுடன் வாக்குக் கேட்கின்றேன். என்னை விமர்சித்து வாக்குக் கேட்பதே, சிலரின் பிரசார வியூகமாக இருக்கிறது.

“மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை, தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கே இருக்கின்றது. அந்தக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றது. அந்தக் கூட்டணியை தமிழ் மக்கள் வெற்றிபெறவைக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .