2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொகவந்தலாவையில் 3 நாள்களில் 20 பேர் கைது

எஸ்.சதிஸ்   / 2019 மார்ச் 25 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச்செல்லும் பொகவந்தலாவ, தெரேசியா கெசல்கமுவ ஓயாவில், சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், கடந்த மூன்று நாள்களில் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 

மேற்படி பகுதியில், நேற்று (24) அதிகாலையும் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிகப்பட்டுள்ள நிலையில், 26ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

  இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், தெரேசியா கெசல்கமுவ ஓயாவில், மாணிக்கக்கல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், இதனால் தேயிலைக் காணிகளுக்கும் சேதம் விளைவிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். 

பிரதேசவாசிகளுடன் இணைந்து, வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான விசமத்தனமான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர்களுக்கு எதிராக, கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .