2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பொது மயான பூமிகளை அளவையிடும் வேலை ஆரம்பம்

எம். செல்வராஜா   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மயான பூமிகளை இனங்கண்டு, அவற்றை அளக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள, பண்டாரவளை பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

சபைத் தவிசாளர், சங்கைக்குரிய கரகாவெல நந்தவிமல தேரரின் பணிப்புக்கமையவே, இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

பண்டாரவளை பிரதேச செயலகம், மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை ஆகியனவும் பண்டாரவளை பிரதேச சபையுடன் இணைந்து, மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

பண்டாரவளை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 60 பொது மயான பூமிகள் இருப்பதாகவும் அம்மயான பூமிகளுக்குக் காணிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.

இம் மயான பூமிகளில் பெரும் நிலப்பகுதி, ஒரு சிலரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலப்பகுதிகளில் பெரும் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், பாதை அமைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் சட்டவிரோத செயற்பாடுகளாகும் என்றும் இவற்றை மயான பூமிக்கு மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு, பண்டாரவளை பிரதேச சபைக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

இந்நிலையிலும், இவ் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முடியாமல் போனால், எதிர்காலத்தில் மயான பூமியே இல்லாது போய்விடும் என்றும் ஆகவே, இம் மயான பூமிகளை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவ் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .