2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘பொறுப்புடன் செயற்படாதவர்களுக்கு தண்டனை’

சிவாணி ஸ்ரீ   / 2020 ஜூன் 16 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி கனந்தொல மலைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுப் பொருள்கள் சேகரிக்கும் நிலையத்தில், கழிவுப் பொருள்கள் சரியான முறையில் வெளியேற்றப்படாமையால், களுகங்கை மாசடைந்து வருகின்றது.  

இந்நிலையில், பொறுப்புடன் செயற்படாத எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார். 

இந்தக் கழிவு சேகரிக்கும் நிலையத்துக்கு, இன்று (16) சென்றிருந்த ஆளுநர், நி​லைமைகளை நேரில் கண்டறிந்து, மக்கள், அதிகாரிகள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

இந்தக் கழிவுப்பொருள்கள், சரியான முறையில் பராமரிக்கப்பட்டு, வெளியேற்றப்படாமையால், சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக, பல்வேறு தரப்பிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் குப்பைகள், முறையாக பிரித்துப் போடப்படுவது கட்டாயமாகவும் என்றும் அவர் கூறினார்.  

இந்தக் குப்பைப் பிரச்சினை காரணமாக, களுகங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் சுமார் 35 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தக் குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு அண்மித்த 30 ஏக்கர் நிலப்பரப்பை, பல்வேறு குடும்பத்தினர் பலவந்தமாக கையகப்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

எனவே, சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டத்திட்டத்துக்கு, அரச சேவையாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .