2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பொறுமைக்கு கிடைத்த பரிசு’

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சங்கீதன்  

தனக்குத் தற்போது கிடைத்துள்ள அமைச்சுப் பதவியானது, தான் பொறுமையாக இருந்தமைக்குக் கிடைத்த வெற்றியென்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம், நேற்று (14), நுவரெலிய மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்​போது கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

தான் ​பொறுமை காத்தமையால், மலையக மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய வாய்ப்புக் கிட்டியுள்ளது என்றும் அதையே தான் எதிர்பார்த்திருந்ததாகவும் கூறிய அவர், இந்தப் பதவியை முழுமையாகப் பயன்படுத்தி, மலையகப் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

சுகாதாரம், கல்வி, பாதை அபிவிருத்தி, ஆலய அபிவிருத்தி, சிறுவர் மகளிர் விவகாரம் ஆகிய துறைகளில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும் இனம், மொழி, மத வித்தியாசமின்றியே, தான் கடமையாற்றி வருவதாகவும் கூறினார்.  

அதுபோன்றே, இனியும் மக்களுக்கான சேவையைத் தான் தொடரவுள்ளதாகவும் அவர் இதன்​போது உறுதியளித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .