2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மடலகம தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கஹவத்தை எந்தான மடலகம தோட்டத்தைச் சேர்ந்த சுமார்  150க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள்,  வேலைநிறுத்தப் போராட்டத்தில்,இன்று ஈடுபட்டனர்.

தோட்டத்  தொழிலாளி ஒருவருக்குச் சொந்தமான காணியில் இருந்த லுனுமிதல மரத்தை,  குறித்த தொழிலாளி தோட்ட ஆலயத்துக்கு,  வழங்கியுள்ளார்.

எனினும், மேற்படி மரத்தின் உரிமையாளரின் அயல்வீட்டுக்காரர், தனக்குதான் அந்த மரம் சொந்தமென்று கூறி, குறித்த மரத்தை உரியைமாளரின் அனுமதியின்றி, கடந்த 15ஆம் திகதி வெட்டியுள்ளார்.

இதனையடுத்து மரத்தின் உரிமையாளரும் ஆலய நிர்வாக சபையினரும் இவ்விடயம் தொடர்பில் கஹவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டுக்கு அமைய இரு சாரரயையும்  அழைத்து பொலிஸார் விசாரணை நடத்தினர். இதன்போது, மரம் வெட்டிய நபர், குறித்த மரம் தனக்குதான் சொந்தமானது என்று கூற, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி விசாரணையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான பதில் கிடைக்காதக் காரணத்தால், தோட்டத் தொழிலாளர்கள்,  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து,  காவத்தை பொலிஸார்  மேற்படித் தோட்டத்துக் சென்று தொழிலாளர்கள் மற்றும் தோட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுன், மர விவகாரம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கு விசாரணை முடியும் வரை, வெட்டப்பட்ட மரம்,  தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் இருக்குமென்றும் கூறிச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .