2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வாரங்களில் வீடு

Editorial   / 2018 மே 27 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மழையுடனான வானிலையால் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள, நிலங்கள் தாழிறங்கியுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு வாரங்களில் தகுந்த இடத்தில் புதிய வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தலவாக்கலை, நோர்வூட், ஹட்டன் மற்றும் மஸ்கெலியா பகுதிகளுக்கு இன்று கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டப் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  மழையால் வீடுகளை இழந்தவர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாகப் பெற்று குறித்த மக்களுக்கு மிக விரைவில் வீடுகளை அமைக்க நடவடிக்​கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .