2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’மண்சரிவில் பாதிக்கப்பட்ட நிவ்வெளி மக்களுக்கு வீடு’

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பி.கேதீஸ்

நோர்வூட் நிவ்வெளி தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, உடனடியாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, அமைச்சர் பழனி திகாம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார் என, மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் அமைச்சரின் நாடாளுமன்ற ஆய்வாளருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

நோர்வூட் நிவ்வெளி தோட்ட பங்களா பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக, 11 குடும்பத்தைச் சேர்ந்த 59 பேர், குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவ்வெளி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நகுலேஸ்வரன், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுளா, நோர்வூட் பிரதேச இணைப்பாளர் ராஜேந்திரன், தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர் ரெங்கராஜ் ஆகியோர், நேற்று (15) நிவ்வெளி தோட்டத்துக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது, மண்சரிவு அபாயப் பிரதேசத்தைப் பார்வையிட்டதோடு மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பத்தினரையும் சந்தித்தனர்.

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 11 குடும்பங்களுக்கும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதி ஒதுக்கீட்டில், புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இதன்போது உறுதியளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X