2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி உள்ள பாடசாலை

Editorial   / 2018 ஜூன் 16 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி கலபட பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர்  உயரத்தில்  அமைந்துள்ள  கலபட தமிழ் வித்தியாலயம்  தொடர்ந்து  மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக, மேற்படி பாடசாலையின் அதிபர் தினேஷ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தம்  காரணமாக மேற்படி பாடசாலையின் சுவர்கள் வெடிப்புற்று  காணப்படுவதோடு, பாடசாலை அருகில் மண் திட்டுகள்  தொடர்ந்து இடிந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.

மேற்படி பாடசாலையில் 1- 9 வரை வகுப்புகள் உள்ளதுடன்,  162 மாணவர்கள் கல்வி  கற்பதோடு, அதிபர் உட்பட மொத்தம் ஐந்து ஆசிரியர்கள் சேவையாற்றி வருகிறார்கள்.

மேற்படி பாடசாலையில்  மண்சரிவு எப்போது ஏற்படும் என்ற   அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மழை காலங்களில் பாடசாலையை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு மழை காலங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும் தவிர்த்து வருகின்றார்கள்.

மேற்படி பாடசாலையை பிரிதோர் இடத்தில் அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் பாடசாலை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி கிடைக்காத காரணத்தால் அது பின்தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, அப்புகஸ்த்தன்ன  தோட்ட கம்பனிக்கு சொந்தமான கலபட தோட்டப் பிரிவில் பாடசாலை அமைப்பதற்கு அப்புகஸ்தன்ன தோட்ட கம்பனி காணி வழங்கப்பட்டிருந்தபோதிலும் M.B.R.O பரிசோதனையில் அந்த காணியில் பாடசாலை அமைப்பதற்கு தகுதியற்றது என குறிப்பிட்டுள்ளது.

எனவே மேற்படி பாடசாலை அமைப்பதற்கு தேவையான காணியை பெற்றுதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் மேலும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .