2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மத்தி, ஊவாவில் தமிழ்க் கல்வியமைச்சு பறிபோகும் நிலை?

Editorial   / 2019 மே 17 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ சண்முகநாதன்  

மத்திய, ஊவா மாகாணங்களில், தமிழ் கல்வி அமைச்சு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், இதனால், பெரும் பாதிப்பை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.  

இது தொடர்பாக மேலும் கூறிய அவர்,  மாகாண சபை நிர்வாக முறைமை கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்தே மத்திய, ஊவா மாகாணங்களில் தமிழ்க் கல்வியமைச்சு அல்லது தமிழ்ப் பிரிவு இருந்து வருவதாகதவும்  அதை நீக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்ததுடன், இதனால், பெரும் பாதிப்பை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென்றும் கூறினார். 

மலையக மக்களுக்காக தற்போதுள்ள ஆறு அமைச்சுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும், சப்ரகமுவ மாகாணத்துக்கு ஓர் அமைச்சு ஒதுக்கப்பட்டு ஏழு அமைச்சுகள் கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்ததுடன், இந்நிலையில் காரணம் எதுவுமின்றி மத்திய, ஊவா மாகாணங்களில் தமிழ்க் கல்வியமைச்சை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சாடினார்.  

சில மாதங்களுக்கு முன்னரே இவ்விடயம் தெரிய வந்தததால், ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறினார். 

தற்போது கொண்டு வரப்படவுள்ள மாற்றத்தில் உடன்பாடு கிடையாது என்பதால், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து, தேவையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .