2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மத்திய மாகாணத் தமிழ்ப் பாடசாலைகளுக்கு சிங்கள மொழிமூல பரீட்சை விடைத்தாள்

சுஜிதா   / 2018 ஜூலை 16 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில், தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் பயிலும் உயர்தர மாணவர்களுக்கு, மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்டு வரும், 2018ஆம்   ஆண்டுக்கான முன்னோடிப் பரீட்சை, தற்போது மத்திய மாகாணப் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இப்பரீட்சையின் வினாப் பத்திரங்களுக்கான புள்ளி மதிப்பீடு செய்வதற்குரிய விடைத்தாள்களை அனுப்புவதில், மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்பட்டு வருவதாக பாடசாலை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாகத் தரம் 12 மற்றும்  13 விஞ்ஞானப் பிரிவின் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கும் தரம் 13 தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் பாடத்துக்குமான விடைத் தாள்கள் அனைத்தும், சிங்கள மொழியிலேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், சிங்கள மொழியிலுள்ள விடைத் தாள்களை, தமிழுக்கு மொழிப்பெயர்த்து, மாணவர்களின் விடைதாள்களை மதிப்பீடு செய்வதில், தமிழ்ப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக, பரீட்சை வினாத்தாள்கள் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டு, அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறே விடைத்தாள்களையும் தமிழுக்கு மொழி பெயர்க்காது தமிழ் பாடசாலைகளுக்கு விநியோகித்தமை குறித்து  பாடசாலை நிர்வாகங்கள் குற்றஞ்சுமத்துகின்றதுடன், குறித்த பாடங்களுக்கான விடைத்தாள்களை தமிழ்மொழியில் வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயற்படவேண்டும் என தமிழ்பாடசாலை நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுக்கின்றன.

இது தொடர்பில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரை மருதபாண்டி ராமேஸ்வரன்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய விடைப்பத்திரங்கள் தவறுதலாக தமிழ் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, இதனை உடனே மாற்றி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது தமிழ்மிரர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .