2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மத்திய மாகாணத்தில் பரவும் “லிஸ்மானியஸ்“ நோய்

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தில் சிறிய  வகை ஈக்களினால் தோல் நோயொன்று பரவுவதாகவும், இதனால் ஏற்படும் புண் நீண்ட நாள்களுக்கு குணமாகாமல் இருக்குமாயின், தகுந்த வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சைப் பெறுமாறும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

“லிஸ்மானியஸ்“ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த நோய் சிறிய வகை ஈயினால் பரவுவதாகவும், குறித்த ஈ கடித்ததன் பின்னர் தோலில் சிகப்பு நிற அடையாளம் ஒன்று ஏற்படுதால் ஏற்படும் அரிப்பையடுத்து குறித்த இடத்தில் புண் தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரை 24 நோயாளர்கள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் மத்திய மாகாணத்தில் முதற்தடவையாக இவ்வாறான நோயொன்று இனங்காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்திலிருந்து பரவியதாகத் தெரிவிக்கப்படும் இந்த நோய் தற்போது மத்திய மாகாணத்தில் பரவி வருவதாகவும், இது தொற்றா நோய் என்பதால், இது குறித்து அச்சமடைய வேண்டாமென்றும், இது குணப்படுத்தக் கூடிய நோயென்றும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X