2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்; மின்சபை ஊழியர்கள் போராட்டம்

Kogilavani   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேன் செனவிரட்ண

மின்சார தூணொன்று குடியிருப்பொன்றின் மீது விழுந்ததால் ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்கள், மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியச் சம்பவம் கண்டி, பஹரிவகந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கண்டி  கிளை ஊழியர்கள் மீது, பஹிரவகந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில்,  வீதியிலிருந்த மின்சாரத் தூணொன்று அருகிலிருந்த வீட்டின் மீது விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. இந்நிலையில் மின்சாரத் தூணை அப்புறப்படுத்துவதற்காக, மின்சார சபையின் ஊழியர்கள் உள்ளடங்களாக ழுவர் அவ்விடத்துக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது பிரதேசவாசிகள் சிலர் மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரத் தூண் அமைக்கப்பட்டதாலேயே, வீடு சேதமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மின்சாரசபை ஊழியர்கள் உள்ளடங்களாக மூவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு, மின்சாரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டி, மாபானவத்துர பிரதேசத்தின் ஒருபகுதி, பஹிரவகந்த பிரிவு, அஸ்கிரிய பிரிவின் ஒரு பகுதிக்கே மின்சாரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கண்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி சமில ரத்னாயக்கவை தொடர்புகொண்டு கேட்டபோது, மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்றும் அவர்களைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனினும் தாக்குதலுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்யாவிடின், நாளைய தினம் (21) மத்திய மாகாணத்துக்கு மின்சாரம் வழங்குவது தடைப்படும் என்று, இலங்கை மின்சார சபையின் மத்திய மாகாண பொறியிலாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .