2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மனைவியின் செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்’

Editorial   / 2018 ஜனவரி 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சூடைக்குடா, மத்தலமலை திருக்குமரன் ஆலயத்தின் சம்பிரதாயங்களை உதாசீனம் செய்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தீப்தி போகொல்லாகமவின் செயற்பாடுகள் தொடர்பில், நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கோரியுள்ளார்.   

திருக்குமரன் ஆலயத்தில் தீப்தி போகொல்லாகம நடந்துகொண்ட விதத்தைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,   

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

“தீப்தி போகொல்லாகம, பிரதேச மக்களினதும் இந்துக்களினதும் நம்பிக்கையை அவமரியாதைக்கு உட்படுத்திவிட்டார். இது வேதனைக்குரியது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே, இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

“அத்துடன், மக்களிடம் அவர் மன்னிப்புக் கோரவேண்டும். இல்லையேல் நாங்கள் அமைதியாக இருக்கப்போவதில்லை. அந்தச் செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.  

“இந்நாட்டில், மதங்களுக்கான சுதந்திரம், கௌரவம், அந்தஸ்து உள்ளிட்ட அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டில்தான் காங்கிரஸ் இருக்கிறது.  

“மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். கலாசாரங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. எனினும், ஆளுநரின் மனைவி, அவ்வாலயத்தில், இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளமை இந்துக்களை மட்டுமல்லாது, அனைத்து மக்களையும் முகம் சுழிக்கச் செய்திருக்கின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .