2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மன்னிப்பு கேட்க மாட்டேன்’

எம். செல்வராஜா   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சுகாதரப் பணிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் தெமோதரை வைத்தியசாலையை திடீரென்று மூடியமை, பணிப்பகிஷ்கரிப்பால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு,  வைத்தியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், தெமோதரை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியை, பிரதேச மக்கள் 100 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் எனினும் அவ்வீதியை மூடுவதற்கு, வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதால், இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.  

சுகாதார பணிப்பாளரை நிந்தித்து அச்சுறுத்தியதாகக் கூறப்பட்டால், பணிப்பாளரும் வைத்தியர்களும் தனக்கெதிராகச் சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அதனை விடுத்து, வைத்தியசாலையை மூடி, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதால் நோயாளர்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். 

சுகாதாரப் பணிப்பாளரிடமோ, வேறு யாரிடமோ மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .