2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மரத்தில் ஏறிய பெண்ணுக்கு ‘நியாயம் பெற்றுத் தரப்படும்’ மாவட்டச் செயலாளர் உறுதி

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவு வளாகத்திலுள்ள மரமொன்றின் மீது ஏறி, எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த, 35 வயது பெண்ணொருவரின் கோரிக்கைத் தொடர்பில், தான் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்து, விசாரணைகளை முன்னெடுத்து, முடிவை அறிவிக்கும் வரை, அப்பெண்ணை அவர் குடியிருக்கும் இடத்திலேயே தங்கியிருக்க அனுமதிக்குமாறு, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொக்குபோதாகம தெரிவித்தார்.

பலாங்கொடை பிரதேச செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள், பலாங்கொடை பொலிஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

குடியிருக்கும் இடத்திலிருந்து, அப்பெண்ணை அப்புறப்படுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தான் செல்ல இடமொன்று இல்லாத காரணத்தால், தனக்கு வசிப்பதற்கான இடமொன்றை வழங்குமாறு கோரி, குறித்தப் ​பெண் நேற்று (26) தனது இரு குழந்தைகளுடன் வருகைத் தந்து, பலாங்கொடை பிரதேச செயலக வளாகத்திலுள்ள மரமொன்றின் மீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பலாங்கொடை பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவினர் வருகைத் தந்து அப்பெண்ணுடன் கலந்துரையாடியப் பின்னர்,  அவர் மரத்திலிருந்து கீழிறங்கியுள்ளார்.

இந்த விடயம் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொக்குபோதாகமவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .