2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மறைந்து நிற்கும் பாரிய கரம்’

மொஹொமட் ஆஸிக்   / 2019 மே 17 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்து நிற்கும் பாரிய கரமொன்று, எதிர்வரும் வெசாக் தின உற்சவங்களைக் குழப்பியடிக்க முயற்சிப்பதாகவும் அது பற்றி, பாதுகாப்புத் தரப்பும் புலனாய்வுத்துறையும் வெகு விரைவில் வெளிப்படுத்தும் என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.  

கண்டிக்கு, நேற்று முன்தினம் (15) விஜயம் செய்த அவர், மல்வத்தை, அஸ்கிரிய, பீடங்களின் மகா நாயக்க தேரர்களையும் ராமஞ்ய நிகாயாக்களின் மகாநாயக்கத் தேரரரையும் சந்தித்து நல்லாசி பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

குளியாப்பிட்டிய, மினுவங்கொடை, முதலான பகுதிகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட பிரச்சினைகள், வெசாக் தின வைபவத்தைக் குழப்பியடிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் இதன் காரணமாக, சர்வதேச ரீதியில் பாரிய அபகீர்த்திக்கு, நாடு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

எனவே, எத்தகைய குறைபாடுகளும் இன்றி, ஆன்மீக ரீதியான பூஜைகள், சமய அனுஷ்டானங்களுக்கு முதலிடம் கொடுத்து, இம்முறை வெசாக் தின நிகழ்வுகளை நடத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.  

நாடு வழமைக்குத் திரும்புவதற்கு இடமளிக்காது, இயல்பு நிலையை முடக்குவதற்கு சிலர் முயன்று வருவதாகவும் முஸ்லிம் பள்ளிகள், முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தாக்கியமை காரணமாக ஏற்பட்டுள்ள விளைவு, மிகப் பயங்கரமானது என்றும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .