2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’மலையக மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்குக’

டி. ஷங்கீதன்   / 2020 ஜனவரி 29 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் ஒரு இலட்சம் வேலைத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நிரலில், மலையக மக்களும் உள்வாங்கப்படுவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் அந்தச் சந்தர்பப்த்தை, மலையக மக்களுக்கு வழங்க, ஜனாதிபதி முன்வரவேண்டும் என்றும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நுவரெலியா தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் பொருளாதாரத்தை மய்யப்படுத்தி, வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் நலன் கருதி, அவர்களது கல்வி தகைமைக்கேற்ற ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளமை வரவேற்கத்தக்கது என்று கூறினார்.

அந்த வேலைத்திட்டத்தில், இந்தியவம்சாவளி மக்களுக்கும் எவ்வித பாகுபாடின்றி,  அந்தந்த பிரதேசத்தில் வாழும் சனத்தொகைக்கு ஏற்ற வகையில், விகிதாசார அடிப்படையில், தொழில் வாய்ப்பு வழங்க, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் வழங்கப்பட்ட அரசாங்க தொழில்வாய்ப்புகளில், இந்தியா வம்சாவளி மக்களை ஓரங்கட்டப்பட்டு, எந்தவித தொழில் வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ரசாங்கத்தால் வழங்கப்படும் உரிமைகளையும் சலுகைகளையும், மலையக மக்கள் போராடியே பெறவேண்டிய சூழ்நிலை இருப்பதாகக் கூறிய அவர், ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் புதிய வேலைவாய்ப்புகளை வழங்கினாலும் அவை அனைத்துமே, இந்திய வம்சாவளி மக்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X