2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலையக அபிவிருத்தி அதிகார சபை அங்குரார்ப்பணம்

ஆர்.மகேஸ்வரி   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையானது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தனித்திருக்கும் மலையக மக்களை சமூக நீரோட்டத்தில் கலக்கச் செய்யும் ஒரு வேலைத்திட்டமாக இவ் அதிகார​சபை இன்று (7) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அத்துடன் இச்சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர்கள் சபையினர் நியமனம் வழங்குதலும்  இடம்பெற்றது. சபையின் தலைவராக தொழிலதிபர் சந்திர ஷாப்ட்டரும் பணிப்பாளர்கள் சபையினராக அமைச்சின் முன்னாள் ஆலோசகர் எம். வாமதேவன், பேராசிரியர் எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் பீ. கௌத்தமன் , ரொசான் ராஜதுரை ஆகியோர் நியமனம் பெற்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .