2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மலையக ஆசிரியர் முன்னணி அனுஷாவுக்கு ஆதரவு

Editorial   / 2020 ஜூன் 22 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பி.கேதீஸ்

மலையக ஆசிரியர் முன்னணி, சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரனுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக, முன்னாள் நுவரெலியா வலய கல்வி உதவி பணிப்பாளரும் ஆசிரியர் முன்னணியின் பிரதித் தலைவரும் மத்திய குழு உறுப்பினருமான சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

அமரர் சந்திரசேகரனின் அரசியல் செயற்பாடுகளுக்கு, சகல மாவட்டங்களிலும் உள்ள  கல்விச் சமூகம், உயிர்கொடுத்து வந்தது எனத் தெரிவித்த அவர், இதில் ஆசிரியர்களின்

மலையக ஆசிரியர் முன்னணியின் தோற்றமும் அதன் செயற்பாடுகளும், மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது என்றும் ஆனால், துரதிஷ்டவசமாக, மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட அதன் அனைத்து கிளை அமைப்புகளுமே, செயலிழந்துவிட்டன என்றும் அவர் கூறினார்.

இந்நிலையிலேயே, அவரது புதல்வியான சட்டத்தரணி அனுஷாவின் அரசியல் பிரவேசம், தங்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கைக் கொடுத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .