2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மலையகத்தில் கறுப்புக்கொடி போராட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.சதீஸ், செ.தி.பெருமாள், கு.புஷ்பராஜ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்குமாறு கோரி, கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும் மலையகத்தின் பல இடங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மலையகத்தில், பொகவந்தலாவ, மஸ்கெலியா, அக்கரபத்தனை, லிந்துலை என பல இடங்களிலும், நேற்று (05) கறுப்புக்கொடி போராட்டமும் கொடும்பாவி எரிப்புப் போரட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கறுப்புக்கொடிகளை ஏந்தியவண்ணம், பொகவந்தலாவ, கொட்டியாகல, செல்வகந்த, ஜேப்பல்டன், பொகவந்தலாவ கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

பொகவந்தலாவ, கொட்டியாகலை ​தேயிலை தொழிற்சாலையிலிருந்து, பொகவந்தலாவ செல்வகந்த சந்தி​வரை பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரரங்கள், ஹட்டன் - கவந்தலாவ, பலாங்கொடை பிரதான வீதிகளை மறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஹட்டனுக்கான போக்குவரத்து, சிலமணிநேரம் தடைப்பட்டிருந்தது. கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் ஆலோசனைகளைப் பெறாமல், தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டனர் என, இதன்போது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கூட்டொப்பந்தத்தின் படி, 700 ரூபாய் சம்பளம் போதுமானது என, தோட்டத் தொழிலாளர்கள் கூறியதாக, பலரும் பொய்யான அறிக்கைகளை விடுத்து வருவதாகவும் தங்களுக்கு, ஒரு நாள் சம்பளமாக, 1,000 ரூபாயைப் பெற்றுத்தரவேண்டியது, உரியவர்களின் கடமையாகும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை நகரில், தங்ககெலே, மெராய, லிந்துலை, நாகசேன, ராணிவத்த,நோனாவத்த, அக்கரகந்த, பெசிபன் உள்ளிட்டதோட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000 தொழிலாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்களது கொழும்பாவிகள், காட்போட் சவப்பெட்டிகளில் கொண்டுவரப்பட்டு, நடுவீதியில் எரிக்கப்பட்டன. ஒப்பாரி வைத்து, இறுதிக்கிரியைகள் செய்து, கொடும்பாவிகள் எரிக்கப்பட்டிருந்தன.

“கறுப்புச் சட்ட ஆளு, காட்டிக்கொடுத்த ஆளு”,“ஆயிரம் ரூபாய் என்னாச்சி, ஆயிரம் ரூபாய் தின்னாச்சி”, மீசக்கார அன்னாச்சி, குறுப்புப் படெ்டி என்னாச்சி”, “தொந்திக்கார அன்னாச்சி, கூட்டொப்பதம் மண்ணாச்சி” போன் கோஷங்களை எழுப்பி, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இடுபட்டனர்.

அக்கரபத்தனை லிந்துலை பகுதியில் ஹோல்புறுக், பெல்மோரா, கீழ்பரிவு கிரான்லி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இவர்கள், அக்கரபத்தனை பெல்மோரா சந்தியில், ஹோல்புறுக்-டயகம பிரதான வீதியை மறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், டயகம ஊடான போக்குவரத்து, சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் பாதிப்புக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள், கறுப்புக்கொடிகளை தலையில் கட்டிக்கொண்டு, கூட்டொப்பந்தத்தை இரத்து செய்யுமாறும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம் என்றும், கொடுப்பனவுகளை மீண்டுதம் தருமாறும் வலியுத்தியிருந்தனர்.

மஸ்கெலிய, பிரவுன்சிக் தோட்டத் தொழிலாளர்களும் பிரவுசிக் பகுதியில் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .