2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மலையகத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு

செ.தி.பெருமாள்   / 2019 மார்ச் 11 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தின் பல இடங்களில், வரட்சி நிலவி வருவதால், மக்களுக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

மவுசாகல நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது, 62 அடியால் குறைவடைந்துள்ளது என்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது, 47 அடியால் குறைவடைந்துள்ளது என்றும் லக்ஷபான நீர்மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார். 

நீரேந்துப் பகுதிகளை அண்டிய வனபகுதிகளுக்கு, ஒரு சில விசமிகளால் தீ வைக்கப்படுவதாலேயே, இவ்வாறு நீரூற்றுகள் அழிவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

இந்நிலையில், புரவுன்சிக் தோட்டப் பகுதியில், பாரியளவில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால், அங்குள்ள மக்கள் சிரமத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மேலும், தோட்ட நிர்வாகம், பௌசர்கள் மூலமாக, மக்களுக்கான குடிநீரை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .