2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மலையகத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

செ.தி.பெருமாள்   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகப்பகுதியில், மரக்கறி வகைகளின் விலை என்றும் இல்லாத அளவுக்கு தற்​போது உயர்ந்துள்ளது. ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 1,200 ரூபாய், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1,500 ரூபாய், ஏனைய மரக்கறிகள் அனைத்தும் ஒரு கிலோகிராம் 600 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனால், தாம் பாரிய அசௌரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கூறினர். பொருட்களின் விலை உயர்ந்தாலும், நாளாந்த வேதனம் உயரவில்லை என்றும் ஒருநாள் வேதனத்தைக்கொண்டு, தங்களது வாழ்க்கையைக் கொண்டு நடத்தமுடியாமலுள்ளது என்றும், அவர்கள் தெரிவித்தனர். எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு, நல்லாட்சி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .