2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’மலையகத்துக்கு 19 பேர் வேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பா.நிரோஸ்

மலையக மக்களின் பிரதிநிதிகளாக உள்ள 9 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, விகிதாசாரப்படி 19 ஆக அதிகரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாரைவார்த்துக்கொடுத்துவிட்டு மலையக மக்களின் பிரச்சினைகளை பேசிவருவதாகவும் அவர் கூறினார்.

வணிகக் கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையகப் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும்போது, நடைமுறையில் செயற்படுத்த வேண்டும் எனும்  தார்மீகப் பொறுப்பு உள்ளது என்றும் மலையக மக்களை பிரநிதித்துப்படுத்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதிலும், விகிதாசாரப்படி 19 எம்.பிகள் இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

1992 ஆம் ஆண்டு, பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டாலும் 1992 ஆண்டுகளுக்குப் பின்னரும் மலையக மக்களின் காணி உரிமைகளை அபகரிக்க முடியாது எ்றும் இதனை சுற்றுநிரூபகமாக தான் வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், விரைவில் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கும் காணி உரிமைகள் வழங்கப்படும். அரசாங்க நியமனங்களின்போது பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .