2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மலையகப் பிரச்சினைகளை நிவர்த்திக்க உதவுவதாக உயர்ஸ்தானிகர் உறுதி

எம். செல்வராஜா   / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகப் பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்திச் செய்ய, தம்மாலான அனைத்துப் பங்களிப்புகளையும் மேற்கொள்ள ஆயத்தமாகவுள்ளதாக,  இலங்கைக்கான கனடா  உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரை, அவரது பதுளை பணியகத்தில் வைத்து, நேற்று (27) சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்துள்ளார். .  

இந்தச் சந்திப்பின் போது, மலையகத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக, கனடா உயர்ஸ்தானிகருக்கு, அ. அரவிந்தகுமார் எம்.பி தெளிவுப்படுத்தினார்.  

இலங்கையில், மிகவும் மோசமான முறையில், கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், உழைப்புக்கேற்ற ஊதியமின்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மலையகச் சமூதாயம் ஓரங்கட்டப்பட்டுள்ளது என்றும் இது, மலையத்துக்கு மாத்திரமென முத்திரைக் குத்தப்பட்டுள்ளதென, அரவிந்தகுமார் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியினால்,  பின்தங்கிய நிலையிலிருந்து மலையகம் ஒரு படி முற்னேற்றத்தை கண்டுள்ளது என்றார்.

இதைச் செவிமடுத்த கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன், மலையகப் பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளையும் இயன்ற வரையில் நிவர்த்தி செய்ய, தன்னாலான பங்களிப்புக்களை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் இது தொடர்பாக, தன்னுடைய கொழும்புப் பணியகத்தில, மனுவொன்றுடன் வந்து சந்திக்குமாறும், இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .