2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஹிந்தவையும் கோட்டாவையும் ‘வீட்டுக்கு அனுப்புவோம்’

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவை வீட்டுக்கு அனுப்பியதைப் போன்று, இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் மஹிந்த, கோட்ட ஆகிய இருவரையும் வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தலவாக்கலையில் நேற்று(10) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,   

“நுவரெலியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், கோட்டாபய ராஜபக்‌ஷவை வேண்டாமென தள்ளினார்கள். அப்படிப்பட்ட ஒரு வேட்பாளருக்கு, எதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  

“மலையக மக்களுக்கு,அமைச்சர் பழனி திகாம்பரம், பாரிய அவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளார். அதேபோன்று அமைச்சர்களான மனோ கணேசன், இராதகிருஷ்ணன் ஆகியோரும் மலையக மக்களுக்கு பாரிய சேவைகளை மேற்கொண்டுள்ளனர்” என்றார்.   

“மலையக மக்களுக்கு, தனிவீட்டுத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறேன். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ மாடி லயத்தை அமைத்துத் தருவதாகக் கூறுகிறார். எதிர்வரும் காலங்களில் பொகவந்தலாவ, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி போன்ற பகுதிகளில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கப்படும். எதிர்வரும் காலங்களில் மலையகப் பகுதிகளிவ் மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .