2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவர்களிடையே போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு

Editorial   / 2018 ஜூன் 10 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவீந்திர விராஜ் அபேசிறி

மாத்தளை மாவட்டத்தின் பாடசாலை மாணவர்கள், போதைப்பொருளுக்குப் பெருமளவில் அடிமையாகுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என, மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பாலித ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாநகர சபையில் அண்மையில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "மாத்தளை மாவட்டத்தினும், மருந்து விற்பனை நிலையங்களின் தொகை, பெருமளவில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஓட்டோக்களில் போதைப்பொருள் விற்பனை செய்யும் அளவுக்கு, தற்போது நிலைமை மாறியுள்ளது. பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் செயற்பாடுகளே அதிகம் முன்னெடுக்கப்படுகின்றன.

"இது தொடர்பில், மாத்தளை பொலிஸ் நிலையத்துக்கு, மாநகர சபை அறிவுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளித்த மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹார, மேற்படி விடயம் குறித்து உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதெனவும், பொலிஸாருக்கும் கல்வி அமைச்சுக்குக்கும் இந்த விடயத்தை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்துவித ஒத்துழைப்புகளையும் வழங்க, மாநகர சபை தயாராக உள்ளதெனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X