2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மாணவர்களைப் பாதுகாப்பதற்கு நிர்வாகத்துடன் பெற்றோர் இணையவேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஸ் 

தவறான செயற்பாடுகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கு, பாடசாலை நிர்வாகத்துடன் பெற்றோர்கள் இணைந்து செயற்படவேண்டும் என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.  

பதுளை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

போதைப்பொருள் பாவனை, மலையகத்தின் பல பாடசாலைகளிலும் பரவி வருவதாகக் கூறிய அவர், மாணவர்களை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடாது பாதுகாக்க வேண்டியது அதிபர், ஆசியர்களின் கடமை என்ப​துபோல, அவர்களுடன் பெற்றோரும் இணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் கூறினார். 

மலையக மாணவர்களின் கல்வி, வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் தருணத்தில், இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கவேண்டும் என்றும் மாணவர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் அவதானிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .