2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மின்விளக்குகள் எரியாமையால் மக்கள் அச்சம்

சுஜிதா   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சுஜிதா

தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதியில், வீதி மின்விளக்குகள் சரியான முறையில் ஒளிர்வதில்லை என்று, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை பஸ் நிலையத்திலிருந்து, நகரசபை காரியாலயக் கட்டடம் வரையான பிரதேசம், இரவு நேரத்தில், முழுமையாக இருளடைந்து காணப்படுவதாகவும் இதனால், அவ்வழியே பயணிப்போருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையிடமிருந்த வீதி மின் விளக்குகளின் பராமரிப்பு,  அண்மைக்காலமாக, தலவாக்கலை லிந்துல நகரசபையின் பொறுப்பின் கீழ் இயங்கி வருகின்றது.  இருப்பினும், நகரசபையினால் இவ்வீதி மின் விளக்குகள்,  முறையாக பராமரிக்கப்படாமையினாலேயே, இப்பிரச்சினை எழுந்துள்ளதாக தெரியவருகின்றது.

எனவே, குறித்த பகுதி மக்களின் நலன் கருதி, இரவு நேரங்களில், வீதி மின்விளக்குகள் சரியான முறையில் வெளிச்சத்தைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை, மாநகரசபை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .