2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’முடுக்கப்படவிருந்த தொழிற்சாலைகள் இயங்குகின்றன’

ஆ.ரமேஸ்   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட இராகலை, உடப்புஸ்ஸலாவ பிரதேசங்களிலுள்ள மூன்று தோட்டங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை மூடிவிடுவதற்கு, தோட்ட நிர்வாகங்கள் மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

எனினும், இந்த தொழிற்சாலைகள் மூடப்படுவதைத் தடுக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நடவடிக்கை எடுத்துள்ளதாக, இ.தொ.காவின் உடப்புஸ்ஸலாவ பிரதேச அமைப்பாளர் எஸ்.கோவிந்தராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக, நேற்று (18) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,

உடப்புஸ்ஸலாவ பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இராகலை - டெலமார், உடப்புஸ்ஸலாவை - ஓல்டிமார், கோடன் ஆகிய தோட்டங்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகளை, பல்வேறு காரணங்காட், மூடிவிடுவதற்கு, தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தமை குறித்து, காங்கிரஸ் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.

இயந்திரக் கோளாறு, இயந்திரம் பழையது, தேயிலை கொழும்பில் விற்பனையாகாமை ​போன்ற காரணங்களை முன்வைத்தே, இந்தத் தொழிற்சாலைகளை மூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது என்றும் கோடன் ​தொழிற்சாலை, கடந்த மூன்று மாதங்களாக இயங்காமலேயே இருந்தது என்றும் அவர் கூறினார்.

எனினும், குறித்த நிர்வாகத்துடன் இ.தொ.கா மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, தற்போது மூன்று தொழிற்சாலைகளும் மீண்டும் இயங்கி வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .