2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: திலகர் எம்.பி கண்டனம்

Nirosh   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஞ்ஞான அடிப்படையில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக தெரிவித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இப்போது ஊவா மாகாண சபைக்கு மீண்டும் கல்வி அமைச்சராக சாமர சம்பத் தசாநாயக்கவை, என்ன விஞ்ஞானத்தின் அடிப்படையில் தெரிவு செய்துள்ளது? என கேள்வி எழுப்பியுள்ள திலகராஜ் எம்.பி சாமர சம்பத்தினால் பாதிப்புற்ற பெண் அதிபருக்கு அநீதி ஏற்படக்கூடாது என்பதை சுயாதீன மனித உரிமைகள் ஆணைக் குழு உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஊவா மாகாண முதலமைச்சர், சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு மீண்டும் கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமெரிக்காவில் இருந்து தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கும்போதே நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி மன்றப் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற, நடைபெறவுள்ள பல மாற்றங்களில் இந்த அமைச்சரவை மாற்றங்கள் முக்கியமானவை. இது நாடாளுமன்றத்தைக் கடந்து மாகாண சபைகளிலும் நிகழ்ந்து வருகிறது. 

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றத்தை எதிர்பார்த்தபோது ஐக்கிய தேசிய கட்சி ஒரு சில மாற்றங்களையேனும் செய்தது.

ஆனால் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியோ விஞ்ஞான அடிப்படையில் ஏதோ செய்யப்போவதாக அறிவித்தது. அது என்ன விஞ்ஞானம் என தெரிந்து கொள்வதற்கு முன்பதாக  அரசியல் விஞ்ஞானத்தின்படி அவர்கள் இருந்த அமைச்சுப் பதவிகளையும் இழந்தார்கள்.

இப்போது ஊவா மாகாண சபைக்கு மீண்டும் கல்வி அமைச்சராக சாமர சம்பத் என்ன விஞ்ஞானத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது புரியவில்லை. அவரால் பாதிக்கப்பட்ட பெண் அதிபருக்கு அநீதி ஏற்படக்கூடாது. அதனை சுயாதீன மனித உரிமைகள் ஆணைக் குழு உறுதி செய்ய வேண்டும்.” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .