2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முன் அறிவிப்பின்றி சந்தா அதிகரிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்  

எவ்வித முன்னறிவிப்புகளுமின்றி தொழிலாளர்களின் சந்தா கட்டணம் அதிகரிப்பட்டுள்ளதாக, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

பெருந்தோட்டங்களில் இ.தொ.காவின் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களின் இம்மாதச் சம்பளத்தில், 233 ரூபாய் சந்தாப் பணமாக அறவிடப்பட்டுள்ளது.  

ஏற்கெனவே 150 ரூபாய் அறவிடப்பட்டு வந்து நிலையில் இம்முறை 83 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டப்படுகிறது.  

கூட்டு ஒப்பந்தத்தில் 20 ரூபாயை அதிகரித்துவிட்டு, சந்தாப் பணமாக 83 ரூபாயை அறவிடுவது எவ்விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

எவ்வித முன்னறிவிப்புகளுமின்றி சந்தாத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

 தொழிலாளர் தேசியசங்கம், மலையக மக்கள் முண்ணனி ஆகிய தொழிற்சங்கங்களில் 150 ரூபாய் மாத்திரமே அறவிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் இ.​ெதா.காவில்  அங்கம் வகிக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தில் மட்டும் 233 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

கூட்டுஒப்பந்தச் சரத்தில் தொழிலாளர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் சந்தாப் பணமாக வழங்கப்பட வேண்டும் என்ற கூறப்பட்டுள்ளப் போதிலும் அது தொடர்பிலான போதிய விளக்கம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.  

‘ஒரு பிரச்சினையே கிடையாது’

பெருந்தோட்டத் துறையில் இலங்கைத் தொழிலாளர் காங்கரிஸுக்கு சந்தா செலுத்தி வரும் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தில், சந்தா தொகை அதிகரிக்கப்பட்டமையானது, வழமையான செயற்பாடென்று, அக்கட்சியின் பொதுக்காரியத்தரசியும் பொதுச்செயலாளருமான அனுசியா சிவராஜா தெரிவித்துள்ளார். 

 சந்தா அதிகரிப்பு ஒரு பிச்சினையே கிடையா​தெனவும் தெரிவித்தார்.  

இது தொடர்பில் தமிழ்மிரருக்குக் கருத்து தெரிவித்த அனுசியா,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கட்சியின் யாப்பில், கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள அதிகரிப்பு செய்யப்படும்போது, நாள் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு இ.தொ.காவுக்கு செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  

தொழிற்சங்கங்கள் சந்தா பணம் அறிவிடுவது வழமையான ஒன்றெனக் கூறிய அவர், சந்தா அதிகரிப்பால் மக்களுக்குப் பிரச்சினை இல்லையெனவும், அரசியல் இலாபத்துக்காக இதனை சிலர் பெரிதுப்படுத்துவதாகவும் கூறினார்.  ‘’அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் காலத்திலிருந்து சந்தாப் பணம் அதிகரிப்பட்டு வருகிறது. எனினும் இம்முறையே சந்தா அதிகரிப்புக்கு அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இ.தொ.காவுக்கு நாடுமுழுவதிலும் 48 காரியாலயங்கள் உள்ளன. இதன் நிர்வாக செலவுகளுக்கே தொழிலாளர்களின் சந்தாப் பணம் பயன்படுகிறது' எனவும் அவர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .