2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மூதாட்டியின் சடலத்துக்கு துணையாக நின்றது நாய்

பாலித ஆரியவன்ச   / 2018 ஜனவரி 08 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னை வளர்த்த 70 வயதான மூதாட்டியின் சடலத்தை, அவ்வீட்​டில் வளர்க்கப்பட்ட நாய், சில நாட்களாகப் பாதுகாத்து வந்த நெஞ்சை உருக்கும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.   

ஒரு சில பிள்ளைகள் தங்களுடைய வயதான தாய், தந்தையை அனாதைகளாக, விட்டுவிட்டுச் சென்றுவிடுகின்ற இந்தக் காலக்கட்டத்தில், சடலத்தை பாதுகாத்​த நாய் தொடர்பிலான, அந்த நெஞ்சை உருவைக்கும் சம்பவமொன்று பதுளையிலேயே இடம்பெற்றுள்ளது.  

பதுளை - நெலும்கம வித்தியாலத்துக்கு முன்பாக அமைந்துள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட நாயே, இவ்வாறு செய்துள்ளது.  

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடந்த 6ஆம் திகதி மாலை 6 மணியளவில், அயல்வாசிகள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.   

விரைந்து செயற்பட்ட பொலிஸார், வீட்டின் கூரைகளை உடைத்து உள்ளே சென்றபோது, அவ்வீட்டில் வசித்த மூதாட்டி இறந்து கிடந்துள்ளார். அந்த மூதாட்டியின் சடலத்துக்கு அருகில், நாயொன்று காவல் காத்துக்கொண்டிருந்துள்ளது.   

​வீட்டுக்குள் குதித்த, பொலிஸார் முன்கதவை திறந்ததும், அந்த நாய், முன் கதவுக்கு முன்பாக போய் நின்றுள்ளது.  
இந்நிலையில், சடலம் மீதான நீதவான் விசா​ரணை, பதுளை நீதவான் ஆனந்த மொரகொடவின் முன்னிலையில் இடம்பெற்றது. அப்போது, அந்த வீட்டு வாசலில், அந்த நாய், நின்றுகொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

நித்திரையில் இருந்தவாறே இவர் மரணித்திருக்கலாம் என்றும், இவர் உயிரிழந்து பல நாட்கள் சென்றிருக்கலாம் எனவும் ​தெரியவந்துள்ளது.  

சடலம் பதுளை தேசிய வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற விசேட வைத்தியரால் பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை நீதிமன்றிடம் கையளிக்குமாறு பதில் நீதவான் ஆனந்த மொரகொட, பதுளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.  

இதேவேளை “தான் கொழும்பு-தலவத்துகொட பகுதியில் உள்ள வீட்டில் பணிபுரிவதாகவும், தனது மனைவிக்கு துணையாக நாய் மட்டுமே இருந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின், 71 வயதான கணவர் தெரிவித்துள்ளார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X