2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மூன்றாம் வாக்கெடுப்பிலும் ’எதிர்த்தே வாக்களிப்போம்’

Editorial   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்    

 

நடப்பாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பிலும், மக்கள் விடுதலை முன்னணி, எதிர்த்தே வாக்களிக்கும் என்று, அக்கட்சியின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் கொத்மலை பிரதேசத்துக்கான கூட்டம், பூண்டுலோயா நகரில், நேற்று (31) முன்தினம் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,

நடப்பாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில், கையாலாகாத அரசு, ஒரு வாக்கெடுப்பில் தோல்வி கண்டுள்ளதென்றும்  முழு வரவு - செலவு திட்டத்தையும் தோல்வியடையச் செய்வது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவினரின் கைகளிலேயே, இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு, தோல்வி கண்டுள்ளது என்றும் இதனால் உள்ளூராட்சி  மன்றங்கள்,  அதன் உத்தியோகஸ்தர்கள் மற்றும் சபைகளின் நடவடிக்கைகளுக்குப்  பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ள இறுதிக்கட்ட வாக்கெடுப்பு, பலரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் ரணிலின் ஆட்சிக்கு முடிவுக்கட்டும் வகையில், இந்த வரவு-செலவுத் திட்டத்தை வெற்றியடைய வைப்பதும் அல்லது தோல்வியடைய வைப்பதும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினரின் கைகளிலேயே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .