2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூன்றுக்கும் தடையாக இருந்தால் ‘நீதிமன்றம் செல்வோம்'

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம், எஸ்.கணேசன், எஸ்.சதிஸ்

அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளின் செயற்பாடுகளுக்கு, அம்பகமுவ பி​ரதேச செயலகம் தடையாக இருக்குமாயின், நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து, அந்தப் பிரதேச செயலகத்துக்கு எதிராக, நீதிமன்றத்துக்குச் செல்​​லவுள்ளதாக என, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச ஆகியோரின் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது.  

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மஸ்கெலியா, நோர்வூட் மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகளின் தலைவர்கள், தமது சபைகளின் வேலைத்திட்டங்களுக்கு, அம்பகமுவ பிரதேச செயலகம் இடையூறாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.   

மேலும், பிரதேச சபைகள் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை, பிரதேச செயலகம் முன்னெடுப்பதாகவும் இதன்போது அவர்கள் சுட்டிக்காட்டினர்.  

இதனால் தாம் தலைமை வகிக்கும் பிரதேச சபைகள், பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இந்த நிலை  நீடிக்குமாயின், இவ்விடயத்தை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லவுள்ள அதேவேளை, நீதிமன்றத்தின் உதவியையும் நாடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.   

இதற்குப் பதிலளித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திலும் உரிய நிறுவனத்திடமும் கலந்துரையாடி, உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .