2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மைத்திரி – மஹிந்தவின் புதிய அரசாங்கத்தில் ’ரூ.1,000 கிடைக்கும் என நம்பிக்கை’

Editorial   / 2018 நவம்பர் 07 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்துள்ள மலைநாட்டு புதியக் கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மைத்திரி – மஹிந்தவின் புதிய அரசாங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயியைப் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதென்றும் தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்றுமுன்தினம்(05) நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற “மக்கள் மகிமை” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், கடந்த மூன்று வருடங்களுக்குப் பின்னர்,  மக்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியிருப்பதாகத் தெரிவித்ததுடன்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் மீண்டும் இணைந்திருப்பதானது, மலையக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மைத்திரி – மஹிந்தவின் புதிய அரசாங்கத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதென்றும் ​ஜனாதிபதியும் பிரதமரும் அதனைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X