2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யானைகளால் தொல்லை; மின்சார வேலியைக் கோரும் மக்கள்

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடையை அண்மித்த வனப் பகுதிகளிலிருந்து எல்லை கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் புரிவதாகவும் எனவே, கிராமரங்களுக்குள் யானைகள் ஊடுறுவுவதைத் தவிர்ப்பதற்கு, மின்சார வேலியை அமைத்துக்கொடுப்பதற்கு, அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தெபேலமுல்ல, போவத்த, தஞ்சந்தென்ன உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்களே, காட்டு யானைகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகள், வீடுகள், குடிசைகள், மரக்கறிச் செய்கைகளை தாக்கி அளிப்பதாகவும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கும் அரசியல் தரப்பினருக்கும் அறிவித்தும் எவ்விதத் தீர்வும் கிடைக்காததால், தாம் அச்சத்துடன் இருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயமாக பலாங்கொடைப் பிரதேச சபையின் தவிசாளர்  சுனில் பிரேமரத்ன தகவல் தருகையில், இப்பகுதியில் ஒரு பக்கத்தில் மாத்திரமே மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன் அதுவும் சரியான விதத்தில் பராமரிக்கப்படுவதில்லை என்றார்.

இதனால், யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் புரிகின்றன என்றும், ஆனால் இவ்விடயம் குறித்து புதிய வன பரிபாலனத்துறை அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .