2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரயில் சேவைகள் தாமதம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

பதுளை - கொழும்பு பிரதான ரயில் போக்குவரத்து பாதையின், அட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை சுரங்கப் பகுதிக்கு அருகாமையில், 109ஆவது மைல் கட்டைப்பகுதியில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, மலையக ரயில் சேவைகள் தாமதமாகி சென்றன.

அதன் பின்னர் பாதிப்பு ஏற்பட்ட தண்டவாளங்களை சீர்செய்யும் பணிகளில், ரயில்  நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டன.

தற்பொழுது தண்டவாளங்கள் சீர்செய்துள்ளதோடு, மலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு மாறியுள்ளதாக, அட்டன் ரயில் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மலையக பகுதிகளில், இன்று பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாகவே, இந்த தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .