2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ராஜபக்‌ஷ குடும்பத்தால் நாட்டுக்கு எதையும் செய்ய இயலாது’

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்  

 

நாட்டுக்குப் புதிய தலைவர் ஒருவரை நியமிக்கும் தொனிப்பொருளுக்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்துக்கு, இந்த நாட்டுக்காகப் புதிதாக எதைச் செய்துவிடமுடியும் என, தேசிய மக்கள் இயக்கத்தின் தலைவர் சமிர பெரேரா கேள்வியெழுப்பியுள்ளார். 

ஹட்டனில், நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,  

ராஜபக்‌ஷகுடும்பத்தினரால், இந்த நாட்டுக்கு எதைக் கொடுக்க முடியும் என்று வினவிய அவர், இறுதியில், நாட்டுக்கு குப்பை வந்து சேர்ந்ததே நடந்தது என்றும் கூறினார்.  

மீதொட்டமுல்லையிலுள்ள குப்பைகளை, இருந்த இடத்திலேயே வைத்துவிட்டனர் என்றும் சீன நாட்டிலிருந்து பெருந்தொகையான கடன் சுமையைக் கொண்டு வந்தார்கள் என்றும் நாட்டிலுள்ள காணிகளைப் பிடித்துக்கொண்டு, மக்களை விரட்டி விட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.  

எனவேதான், மஹிந்த ராஜபக்‌ஷவை, 2015ஆம் ஆண்டு வீட்டுக்கு அனுப்பியதாகவும் அதேபோன்று, அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவும், இந்த நாட்டுக்கு எதையும் செய்துவிடவில்லை என்றும் அவர் கூறினார்.  

தான் செய்த தவறுகளை மூடி மறைக்க, மில்லியன் கணக்கில் பணத்தைச் செலவு செய்து, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்த கோட்டாபய ராஜபக்‌ஷ, எவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.  

கோட்டாபாய ராஜபக்‌ஷவை எதிர்த்து போராடுவதற்கு, அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு என்ன தகுதியுண்டு என்றும் சஜித்தின் தகுதியை வினவ முன்னர், கோட்டாபயவின் தகுதியைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .