2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘ரூ.1,000 கோரிக்கை நியாயமானது’

Editorial   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஜித்லால் சாந்த உதய  

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நா​ளொன்றுக்கான அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோருவது, நியாயமானதெனத் தெரிவித்துள்ள சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க, மாகாண ஆளுநர் என்றல்லாமல், தனிநபர் என்ற ரீதியில், அந்தக் கோரிக்கையுடன் தான் இணங்கிப்போவதாகவும் தெரிவித்தார்.  

ருவன்வெல்ல கலைவாணி தமிழ் வித்தியாலயத்தில், தோட்டத் தொழிலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அடிப்படைச் சம்பளமாக, ஆயிரம் ரூபாயை உயர்த்துமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள், கடந்த நான்கு மாதங்களாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியதுடன், மாகாண ஆளுநர் என்ற ரீதியில் அவர்களுக்குச் சார்பாக தன்னால் பேச முடியாது. எனினும், தம்ம திசாநாயக்க என்ற தனிபராக, தொழிலாளர்களின் பக்கமே இருப்பதாகவும் தெரிவித்தார்.  

தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் கோரிக்கையும் அவர்களது போராட்டங்களும் நியாயமானதென்றும் அவர் விமர்சித்தார்.  

தோட்டத் தொழிலாளர்களது பிள்ளைகளின் கல்வி மட்டம் உயர்வடைய வேண்டுமென்று கேட்டுக்கொண்டதுடன், தொழிலாளர்களது பிள்ளைகள், கொழும்பு போன்ற நகர்புறங்களுக்கு, கொத்து பாஸ்களாகவோ, வீட்டு பணியாளர்களாகவோ செல்லாது, கௌரவமிக்க பிரஜைகளாக, நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X