2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரூ.50ஐ பெற்றுக்கொடுப்பதில் மந்தநிலை

Editorial   / 2019 மார்ச் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டுக்கான பாதீடில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் எனக் கூறிய போதிலும், அது இன்னும் மந்த கதியிலேயே இருந்து வருவதாகக் கூறிய ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் முயற்சியால் பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பள அதிகரிப்பே, தற்போது மிஞ்சியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்று கூறி  பல தலைவர்கள், அரசியல் இலாபத்துக்காக, வீதியில் இறங்கிப் போராடியதாக விமர்சித்ததுடன், ஆனால், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் பயனாகவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு, சம்பள உயர்வு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.  

இ.தொ.காவிடமுள்ள  சிறந்த ஆளுமையே, இந்தச் சம்பள அதிகரிப்புக் காரணம் என்பது, பலருக்குத் தெரியவில்லை என்றும் அவர் சாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .