2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

லயன் வாழ்க்கை முறைமை இல்லாதொழிக்கப்பட்டு, தனி வீடுகளுடனான ‘கிராமங்கள் உருவாக்கப்படும்’

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

மலையகத்தில், லயன் வாழ்க்கை முறைமையை இல்லாதொழித்து, புதிய கிராமங்களை அமைப்பதே தமது நோக்கம் என்றுத் தெரிவித்துள்ள மலைநாட்டுப் புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம், எனவே, ஒவ்வொரு தோட்டங்களையும் சேர்ந்த மக்கள், தனிவீட்டுத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.  

டிக்கோயா, வனராஜா தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு, மக்களுக்கான பணியை ஆற்றி வருகின்றோமே தவிர, மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.  

மக்களிடமிருந்து அரசியல் பலத்தைப் பெற்றுக்கொண்ட தாம், அந்தப் பலத்தை வைத்துக்கொண்டு இதுவரை, தனி வீட்டுத்திட்டம், பிரதேச சபைகள் அதிகரிப்பு, மலையக அதிகாரசபை உருவாக்கல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.  

ஒரு தோட்டத்தில், ஐம்பது வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு வீடுகளை இல்லாமல் செய்வது தமது நோக்கமல்ல என்றும் அனைத்துத் தோட்டங்களையும் சேர்ந்த மக்களுக்கு, தனிவீட்டுத் திட்டம் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் கூறினார்.  

தற்போது தாங்கள் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை, கடந்த காலத்தில் மலையகப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் மேற்கொண்டிருந்தால், மலையக மக்கள் எதிர்கொள்ளும் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.   

இன்று தேயிலையின் விளைச்சலும் தேயிலைக் காணிகளின் பரப்பளவும் அதிகரித்துக் காணப்பட்டாலும், தேயிலை ஏற்றுமதி குறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், சிறுதோட்ட உரிமையாளர்களே, 70 சதவீதமான தேயிலை ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .