2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லெட்சுமி தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

கூட்டொப்பந்தத்தை மீறி, தோட்ட நிர்வாகம் செயற்பட்டு வருவதாகவும் எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்று வலியுறுத்தியும், பொகவந்தலாவை லெட்சுமி தோட்டம், மத்தியப் பிரிவு தோட்டத் தொழிலாளர்கள், நேற்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளாந்தம், 17 கிலோகிராம் தேயிலைப் பறித்தால் மட்டுமே, 730 ரூபாய் சம்பளத்தை வழங்க முடியுமென்று, தோட்ட நிர்வாகம் கூறிவருவதாகவும், கொழுந்து வளர்ச்சி இல்லாதக் காலங்களில், 17 கிலோகிராமுக்கும் குறைவாக, கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு, 730 ரூபாய் சம்பளத்தை வழங்க தோட்ட நிர்வாகம் மறுத்து வருவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கூட்டொப்பந்தத்தின்படி, நாள் ஒன்றுக்கான கொடுப்பனவாக 730ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும், காடுகளாக வளர்ந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள் துப்புறவு செய்யப்பட வேண்டுமென்பதுடன், தொழிலாளர்கள் பாதுகாப்பாக தொழில்புரிவதற்கான ஆரோக்கியமான சூழலை, தோட்ட நிர்வாகங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், ஹட்டனில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த நிபந்தனைகளை மீறும் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்படுமென்றும், அவர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இவ்வறிவுறுத்தல்களையும் மீறியே லெட்சுமித் தோட்ட நிர்வாகம் செயற்பட்டு வருவதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில், லெட்சுமித் தோட்ட முகாமையாளர் ஆர்.எஸ்.கொத்தலாவலவை தொடர்புகொண்டு கேட்டபோது,

“தேயிலை கொழுந்து அதிகமாகக் காணப்படும் காலத்திலும் சரி, கொழுந்து குறைவாகக் காணப்படும் காலத்திலும் சரி, ஒரு தோட்டத் தொழிலாளி, கட்டாயமாக 17 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை பறித்தால் மட்டுமே, அவருக்கு 730ரூபாய் கொடுப்பனவை வழங்க முடியும்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .