2024 மார்ச் 28, வியாழக்கிழமை

லொறி-பஸ் மோதி விபத்து

மு.இராமச்சந்திரன்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் 

ஹட்டன்- கண்டி பிரதான வீதி, வூட்லேண்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து லொறியுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து கண்டிக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ்ஸே , இன்று பகல், ஹட்டன் டீ விலா விடுத்திக்கு அருகில் வைத்து, லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் லொறி  தவறான பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டமையே விபத்துக்கு  காரணம் எனவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்ததுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X