2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வங்கெடி மலையில் காணாமற்போன இளைஞர்கள்

Editorial   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கொழும்பு தனியார் பல்கலைக்கழமொன்றைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று, ஹல்துமுல்ல - பம்பரகந்த பிரதேசத்துக்கு, நேற்று முன்தினம் சுற்றுலா மேற்கொண்டிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், இந்தக் குழுவினர், பம்பரக்கந்ததையை அண்மித்துள்ள வங்கெடி மலைக்குச் சென்று காணாமற்போன நிலையில், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன், நேற்று (28) காலை, பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

ஒன்பது பேரடங்கிய குழுவினரே, நேற்று முன்தினம் மாலை வங்கெடி மலைக்குச் சென்று காணாமற்போனதாகத் தெரிவித்த பொலிஸார், இந்தக் குழுவைச் சேர்ந்த மாணவரொருவர், அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்கிய தகவலுக்கமைவாகவே, இவர்களைப் பாதுகாப்பாக மீட்க முடிந்ததாகவும் கூறினர்.

மாணவர்கள் மலையேறும்போது, கடுங்காற்று வீசியதாகவும் கருமையான மேகம் மற்றும் அதிக பனிமூட்டம் காணப்பட்டதால், அவர்களுக்கு வழி தெரியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரதேசத்தில், அதிக குளிர் நிலவுவதால், இந்தக் குழுவைச் சேர்ந்த மாணவரொருவர் சுகவீனமடைந்துள்ளாரென்றும் தெரிவித்த பொலிஸார், சம்பவ இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .